Watch Video: செம வேகம்.. ஹெல்மெட்டை 'பதம்பார்த்த' பவுன்சர்.. நிலைகுலைந்து 'கீழே' விழுந்த வீரர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது 162 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. இந்தியாவும் பாலோ-ஆன் கொடுக்க தென்ஆப்பிரிக்கா தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் திணறிய தென் ஆப்பிரிக்காவின் டாப் ஆர்டர் 22 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்தநிலையில் போட்டியின் 10-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அப்போது எதிர்முனையில் இருந்த டீன் எல்கரின் ஹெல்மெட்டை உமேஷின் பவுன்சர் பதம் பார்த்தது.
இதனால் நிலைகுலைந்து போன அவர் மைதானத்திலேயே மடங்கி விழுந்தார். தொடர்ந்து தேநீர் இடைவேளை அறிவிக்கப்பட்டது. 29 பந்துகளை சந்தித்து 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் டீன் எல்கர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
எல்கருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டியிருப்பதால் அவருக்கு பதிலாக டி புரூய்ன் களமிறங்கினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.