வெளிநாட்டில் கணவரை வெட்டி.. குடிநீர் தொட்டியில் மறைத்த இந்திய செவிலியர்!. .. உறுதியான மரண தண்டனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏமன் நாட்டு இளைஞர் ஒருவரைக் கொன்று உடலை வெட்டி துண்டாக்கி குடிநீர்த் தொட்டியில் மறைத்த வழக்கில் இந்திய செவிலியருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயது நிமிஷப் பிரியா என்பவர் ஏமன் நாட்டவரைக் கொன்றதற்காக அந்நாட்டு சிறையில் உள்ளார். இந்த கொலை வழக்கில் நிமிஷப் பிரியாவுக்கு மாகாண நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை ஏமன் உச்ச நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி உறுதி செய்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஏமன் நாட்டவரும் நிமிஷாவுடன் இணைந்து சுகாதார மையம் நடத்தி வந்தவருமான தலால் அப்து மஹ்தி என்பவர் கொல்லப்பட்டார். முன்னதாக நிமிஷா கொலை செய்யப்பட்ட, தலால் என்பவரின் மனைவி என்று எமன் நாட்டில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி எனவும் சுகாதார மையத்திற்கு அனுமதி பெறுவதற்காகவே அவ்வாறு சான்றிதழ்களை தயார் செய்ததாகவும் குறிப்பிட்ட நிமிஷா திருமணமான, தலால் தனக்கு பலமுறை பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், போதைமருந்துக்கு அடிமையான அவருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இணங்கச் சொல்லி வலியுறுத்தி வந்ததாகவும், நிமிஷா குறிப்பிட்டுள்ளார். பலமுறை துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்த தலால் மீது ஒரு கட்டத்தில் காவல் நிலையம் சென்று நிமிஷா புகார் அளித்ததை அடுத்து, தலால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி மேலும் அதிக தொல்லையைத் தந்ததாகத் தெரிகிறது. இதனால் தனது உயிருக்கு ஆபத்து என்று கருதிய நிமிஷா தனது தோழியான செவிலியர் ஹனானுடன் இணைந்து தலாலைக் கொண்டு, அவருடைய சடலத்தை மருத்துவ முறையில் வெட்டி குடிநீர் தொட்டியில் மறைப்பதற்கு முடிவு செய்தார். அப்படி கொலை செய்த பின்னர் சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிமிஷா வேலைக்கும் சேர்ந்துள்ளார்.
இதனிடையே தலால் காணாமல் போனதும் நிமிஷாவும் மாயமானது பற்றி உள்ளூர் செய்திகளிள் தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது மத்திய சிறையில் இருக்கும் நிமிஷா தனது மரண தண்டனையை எதிர்நோக்கி வருகிறார்.
மற்ற செய்திகள்