‘இந்த 3 மாதங்களும்’... ‘பத்திரமா இருந்துக்கோங்க’... ‘எச்சரிக்கும் வானிலை மையம்’... தகவல்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இந்த ஆண்டும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளிர்காலமான ஜனவரி மாதம் முடிந்து பிப்ரவரி மாதத்திலேயே தற்போது வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், வழக்கம்போல், இந்த ஆண்டும் வெப்பநிலை உயர்ந்து காணப்படும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுவும் குறிப்பாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை, 3 மாதங்களும் வெப்ப நிலை அதிகரித்து காணப்படும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்தியாவின் சில பகுதிகள், வடமேற்கு, மேற்கு, மற்றும் மத்திய மாநிலங்களில் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 0.37 டிகிரி செல்சியஸ் முதல் 0.41 செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.