'கல்யாணம் ஆகமாட்டேங்குது'... 'அப்போ இத பண்ணி தான் ஆகணும்'... ஆண்கள் எடுக்கும் முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் செய்து கொள்வதற்காக இடம்பெயரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சமீபத்தில் வெளிவந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

'கல்யாணம் ஆகமாட்டேங்குது'... 'அப்போ இத பண்ணி தான் ஆகணும்'... ஆண்கள் எடுக்கும் முடிவு!

திருமணம் என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நிகழ்வாகும். காதல் திருமணங்கள் அதிகமாக நடந்தாலும், திருமணத்திற்காக ஆணுக்கு பெண் கிடைப்பதும், பெண்ணுக்கு ஆண் கிடைப்பதும் தற்போது பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது என்பதே பல பெற்றோர்களின் மனக்குமுறலாக உள்ளது. இதனால் பலருக்கும் திருமணம் தள்ளி போகும் சூழ்நிலை என்பது தற்போது அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போதைய இயந்திர உலகில் திருமணத்திற்காக தங்களின் சொந்த இடத்தை விட்டே இடம் பெயரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2001 மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 30 கோடியே 90 லட்சம் பெண்களில் 20 கோடியே 60 லட்சம் பெண்கள் திருமணத்துக்காக பிறந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயருகிறார்கள்.

அதே போன்று 14 கோடியே 60 லட்சம் ஆண்களில், 53 லட்சம் ஆண்கள் மட்டுமே திருமணத்துக்காக இடம் பெயருகின்றனர். இருப்பினும் ஆண்கள் இவ்வாறு இடம் பெயருவது 2001-ஐக் காட்டிலும் 2011 கணக்கெடுப்பின்படி அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆண்கள் திருமணத்திற்காக இடம் பெயரும் மாநிலங்களின் பட்டியலில் மேகாலயா, தமிழ்நாடு, மிசோரம், கேரளா, அசாம், மணிப்பூர், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை நகர்ப்புற ஆண்களை விட கிராமப்புற ஆண்கள் திருமணத்திற்காக இடம் பெயர்தல் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது.

KARNATAKA, KERALA, MARRIAGE, MIGRATING, 2001 CENSUS, INDIAN MEN