தேர்தல் முடிவுகள்: சுயேட்சைகள் கையில் சாயல்குடி பேரூராட்சி.. செல்வாக்கை இழந்த திமுக, அதிமுக

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ராமநாதபுரம்: சாயல்குடி பேரூராட்யில் உள்ள 15 இடங்களையும் சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றி வெற்றி வாகை சூடினர்.

தேர்தல் முடிவுகள்: சுயேட்சைகள் கையில் சாயல்குடி பேரூராட்சி.. செல்வாக்கை இழந்த திமுக, அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகள் மற்றும் மண்டபம், தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பேரூராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, ராம நாதபுரம்&தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.  ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

பரமக்குடி நகராட்சி மற்றும் அபிராமம், முதுகுளத் தூர், கமுதி, சாயல்குடி ஆகிய பேரூராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, பரமக் குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஓட்டுபதிவு எந்திர பாதுகாப்பு அறை, எண்ணிக்கை நடைபெறும் அறைகள், ஊடக மையம், முகவர்கள் அமரும் இடம், பாதுகாப்பு வசதிகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள், கண்காணிப்பு காமி ராக்கள் குறித்து தேர்தல் பார்வையாளர் அஜய் யாதவ், கலெக்டர் சங்கர்லால் குமாவத் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Independents win in Sayalgudi municipal election results

ராமநாதபுரம் நகராட்சி 5 சுற்றுகளும் 10 மேஜைகளும், கீழக்கரை நகராட்சி 2 சுற்றுகளும் 4 மேஜைகளும், ராமேஸ்வரம் நகராட்சி 3 சுற்றுகளும் 8 மேஜைகளும், மண்டபம் பேரூராட்சி 3 சுற்றுகளும் 8 மேஜைகளும், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், தொண்டி பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், பரமக்குடி நகராட்சி 7 சுற்றுகளும் 10 மேஜைகளும், அபிராமம் பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், கமுதி பேரூராட்சி 1 சுற்றுகளும் 1 மேஜைகளும், முதுகுளத்தூர் பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளும், சாயல்குடி பேரூராட்சி 1 சுற்றுகளும் 4 மேஜைகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தற்போதைய நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 42 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோன்று  ஒட்டு மொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,306 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 283 இடங்களில் அதிமுகவும்,  465 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களிலும் சுயேட்சைகள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் திமுக, அதிமுக மற்றும் இதர கட்சிகள் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டனர். 15 சுயேட்சைகள் வெற்றி பெற்றது இதர கட்சிகளை முகம் சுழிக்க வைத்துள்ளது.

Independents win in Sayalgudi municipal election results

சுயேட்சைகள் வெற்றி பெற்றது எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன், எம்.பி., ரித்தீஷ்குமார் ஆகியோரிடையே உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த தேர்தலில் யார் 'ஒஸ்தி' என்பதை நிரூபிக்கும் போட்டியாக மாறியதாகக் கூறப்படுகிறது. சுப.தங்கவேலன் நீண்ட காலமாக ராமநாதபுரம்மாவட்ட செயலராக உள்ளார். இருதரப்பும், தனித்தனியாக கூட்டம் நடத்தி தங்கள் பலத்தை காண்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆள் பலத்தை காட்டவே, சுயேட்சைக்களாக வேட்பாளர்களை நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

URBAN ELECTION RESULT, TAMILNADU, SAYALKUDI, INDEPENDENTS CANDIDATES, RAMANATHAPURAM

மற்ற செய்திகள்