'இத யாருமே எதிர்பாக்கல'... 'இன்பன் உதயநிதிக்கு இப்படி ஒரு முகமா'?... 'அப்பாவுக்கே Tough கொடுப்பார் போலயே'... வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இன்பன் உதயநிதிக்கு இப்படி ஒரு முகமா என நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியமடைந்துள்ளார்கள்.

'இத யாருமே எதிர்பாக்கல'... 'இன்பன் உதயநிதிக்கு இப்படி ஒரு முகமா'?... 'அப்பாவுக்கே Tough கொடுப்பார் போலயே'... வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு !

இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இது இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழில்முறை கால்பந்து தொடர் ஆகும். தற்போது வரை  21 கிளப் அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது. 2020-21ஆண்டிற்கான ஐ-லீக் தொடரைக் கோகுலம் கேரளா எஃப்சி அணி வெற்றி பெற்று அசத்தியது.

Inban Udhayanidhi join hands with Neroca FC team

தற்போது அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணிக்குத் தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள ஒருவர் குறித்துத் தான் தற்போது பலரும் பேசி வருகிறார்கள்.

Inban Udhayanidhi join hands with Neroca FC team

அவர் தமிழ்நாட்டு முதலமைச்சரின் பேரனும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி தான். இதுதொடர்பாக அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் நெரோகா எஃப்சி அணி வெளியிட்டுள்ளது. நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அணி 2020-21-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ-லீக் தொடரில் கடைசி இடம்பிடித்தது. இதன் காரணமாக அடுத்த தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்புடன் தனது வீரர்களை அந்த அணி தேர்வு செய்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neroca FC (@nerocafc)

மற்ற செய்திகள்