'ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால்'... 'அது யாருக்கு தெரியுமா?'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது யாருக்கு என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

'ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால்'... 'அது யாருக்கு தெரியுமா?'... அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து!

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் நடமாடும் டீக்கடையை அமைச்சர்கள் திரு.எம்.சி சம்பத் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின்னர் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதுகுறித்து பேசிய ஜெயக்குமார், ''நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய உடல் நிலை குறித்து கட்சி தொடங்கவில்லை என்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் முடிவெடுத்திருப்பதன் காரணமாக அதிமுக சார்பில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து என்றும் தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். மேலும், கலை உலகத்திற்கு பெரும் படைப்புகளைப் படைக்க வேண்டும் என்பதே எங்களின் நிலை. ரஜினிகாந்த் எதிர்காலத்தில் ரஜினிகாந்த் ஆதரவு என்ற குரல் கொடுத்தால் அந்த ஆதரவினை மக்களுக்கு நல்லது செய்யும் அதிமுகவிற்கு மட்டும்தான் அவர் அளிப்பார்.  தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். இதனைக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சருடன் நடிகர் விஜய் சந்தித்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நடிகர் விஜய் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. மாஸ்டர் திரைப்படம் வெளியாவது குறித்து பேச்சுக்கள் நடைபெற்றிருக்கலாம் இது தவிர்த்து வேறு எந்த உள்நோக்கமும் இல்லை, எனப் பதிலளித்தார்.

மற்ற செய்திகள்