இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, சர்வதேச ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2, சிறப்பு எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்ட் சப்ளை செய்‌ததாக கைது செய்யப்பட்ட ராஜேஷ் என்பவருக்கு ஜாமீன் மறுக்‌கப்பட்டுள்ளது.

3, 100 நாள் ஆட்சியை நிறைவு செய்ததும் ராமர் கோயிலுக்கு சென்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே வழிபாடு செய்ய உள்ளதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

4, இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் உள்ள செல்வமானது, இங்கு வசிக்கும் 95.3 கோடி ஏழை மக்களிடம் இருக்கும் செல்வத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

5, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜனவரி 30ஆம் தேதி கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6, ரஜினியை கண்டு அரசியல் கட்சியினர் பயப்படுகின்றனர் என்று பழ.கருப்பையா கூறியுள்ளார்.

7, ஜனவரி 23, 1897 அன்று பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோசின் 123வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் காலனித்துவத்தை எதிர்ப்பதில் சுபாஷ் சந்திரபோசின் துணிச்சலுக்கும், உறுதியான பங்களிப்பிற்கும் இந்தியா போஸுக்கு எப்போது, நன்றியுடன் இருக்கும் என்றும் மோடி கூறியுள்ளார். 

NEWS, HEADLINES, TODAY