1. டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணிநேரம் திறக்க உத்தரவிடக்கோரி வழக்கு - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 2. யாரை டின்னருக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என ரசிகர்களின் கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அதிரடி பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்1. சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஒருவர் ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை தினமும் 2 மணி நேரமாவது திறக்க கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முரளி விஜய்யிடம் ரசிகர்கள் சார்பில் யாரை டின்னருக்கு அழைத்துச் செல்ல விருப்பம் என்று கேட்கப்பட்ட கேள்வியில், “ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெரியை டின்னர் அழைத்து செல்ல விரும்புவதாக தெரிவித்தார. அவர் மிகவும் அழகானவர் என்றும் கலகலப்பாக பேசினார்.
"If Viru is there at the other end, runs automatically flow in. MS is always a calming factor in the middle." #Monk @mvj888 gets candid! @virendersehwag @msdhoni #AnbuDenLions @RuphaRamani 🦁💛 pic.twitter.com/eA5qHBiZOx
— Chennai Super Kings (@ChennaiIPL) April 15, 2020
3. நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
4. 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்து வருவதன் மூலம் உலக அரங்கில் இந்தியா தனது அரசியல் உறவுகளை வலுப்படுத்தி உள்ளது.
5. இந்தியாவின் மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
6. கொரோனா பரவலுக்கு மத்தியில் தென் கொரியா வெற்றிகரமாக தேர்தலை நடத்திய நிலையில், கொரோனா பரவலை அதிபர் மூன் ஜே இன் சிறப்பாக கையாண்டதால் அவரது கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பெற்றுள்ளது.
7. டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டததைத் தொடர்ந்து 72 வீடுகளைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்திக்கச் சொல்லி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
8. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர் தனிமை காலம் முடியும் முன்பே சொந்த ஊர் திரும்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9. தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று மேலும் 25 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1267 ஆக அதிகரித்துள்ளது.
10. காய்கறிகள் விளைச்சல் அதிகம் காரணமாக ஊரடங்கிலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து தங்கு தடையின்றி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.