"கத்தாத.. Mic -அ கொடுத்துட்டு போய்டுவேன்".. இசைவிழாவில் இரைச்சலை எழுப்பிய சிலர்.. கோபமடைந்த ராஜா.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது படத்தின் டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலை
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
துணைவன்
இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Images are subject to © copyright to their respective owners.
டிரெய்லர்
இன்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் டிரெய்லர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மக்கள் படை தலைவராக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் பாத்திரமாக விஜய் சேதுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. கடைநிலை காவலராக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். பழங்குடியின போலீஸாக வாத்தியாரை பிடிக்க முனைப்பு காட்டும் போலீசாக சூரி டிரெய்லரில் தோன்றியுள்ளார். மிரட்டலான இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இளையராஜா
இதனிடையே இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் விஜய் சேதுபதி, சூரி, இசைஞானி இளையராஜா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசிக்கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆராவாரம் செய்து கூச்சலிட்டனர். அப்போது,"கத்தாத, மைக்கை கொடுத்துட்டு போய்டுவேன்" என இளையராஜா சற்றே கோபமான குரலில் சொன்னார். இதனையடுத்து அங்கிருந்த இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் அமைதியாக இருக்கும்படி ரசிகர்களுக்கு சைகை செய்தனர். பின்னர் அமைதி திரும்பவே இளையராஜா தனது பேச்சை தொடர்ந்தார்.
மற்ற செய்திகள்