K. Viswanath : கே.விஸ்வநாத் மறைவு.. இளையராஜா இரங்கல் வீடியோ.. “மறக்க முடியாத காம்போ” ரசிகர்கள் உருக்கம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பழம்பெரும் நடிகரான கே.விஸ்வநாத் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

K. Viswanath : கே.விஸ்வநாத் மறைவு.. இளையராஜா இரங்கல் வீடியோ.. “மறக்க முடியாத காம்போ” ரசிகர்கள் உருக்கம்..

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உங்களால் என் குழந்தை பருவம்".. இயக்குனர் கே. விஸ்வநாத் மறைவுக்கு A.R. ரஹ்மான் இரங்கல்!

இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் கே. விஸ்வநாத். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் ஆகியவை இந்திய சினிமாவில் மிக முக்கிய  திரைப்படங்களாகும்.

நடிகராக கே. விஸ்வநாத், அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமலுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் லிங்கா ஆகிய படங்களில் தமிழில் நடித்துள்ளார்.

50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் இந்திய திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர். இவர் மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதையும் பெற்றுள்ளார். ஆறு முறை இந்திய அரசின் தேசிய விருதை வென்றவர். 8 முறை ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். இந்நிலையில் நேற்று வயது முதிர்வின் காரணமாக கே.விஸ்வநாத் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கே. விஸ்வநாத் இறப்பு செய்தி கேட்டு தான் துயருற்றதாகவும், இறைவனடி சேர்ந்த கே.விஸ்வநாத்தின் ஆத்மா சாந்தி அடைய, தான் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் இசைஞானி இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனிடையே கே.விஸ்வநாத் இயக்கிய சுவாதி முத்யம், சங்கரா பரணம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசைஞானி இசையமைத்துள்ளார். இந்த படங்களில் பாடல்கள் பெருவெற்றி அடைந்தவை, அவற்றை மறக்க முடியுமா என ரசிகர்கள் உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் மரணம் : திரையுலகினர் இரங்கல்.

K. VISWANATH, ILAIYARAAJA

மற்ற செய்திகள்