‘கேரள சட்டமன்ற தேர்தல்’!.. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம்’.. கேரள பாஜக தலைவர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை ரூ.60க்குக் குறைப்போம் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

‘கேரள சட்டமன்ற தேர்தல்’!.. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம்’.. கேரள பாஜக தலைவர்..!

தமிழகத்தை போலவே வரும் ஏப்ரல் 6-ம் தேதி கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 1 லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

If BJP comes to power in Kerala, fuel prices will be Rs60: Kummanam

இதுகுறித்து தெரிவித்த கும்மணம் ராஜசேகரன், ‘பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை வைக்காதது ஏன்?. நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தோம் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால் 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60 தான் வரும். அதனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 என்று குறைக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.

If BJP comes to power in Kerala, fuel prices will be Rs60: Kummanam

பெட்ரோல், டீசல் விலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை கும்மனம் ராஜசேகரன் சுட்டிக்காட்டினார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்