'நடிகர் சித்தார்த்துக்கு வந்த மிரட்டல்'... 'இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்'... தெறிக்க விட்ட நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவான ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

'நடிகர் சித்தார்த்துக்கு வந்த மிரட்டல்'... 'இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்'... தெறிக்க விட்ட நெட்டிசன்கள்!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திர பிரதேசம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அம்மாநில அரசு உண்மை நிலையை மறைக்கிறது எனவும், கொரோனா தொற்றுகளையும், இறப்புகளையும் அரசு குறைத்துக் காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை என்று தவறான தகவல்களைத் தரும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து  சித்தார்த் அண்மையில் கொரோனா தடுப்பூசி குறித்தும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

I Stand With Siddharth hashtag goes india trend for Support Sidharth

இதன் காரணமாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவின் சார்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500க்கும் மேற்பட்ட வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன.

அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவுக்குப் பலர் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அளவில் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மற்ற செய்திகள்