"நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை"... "2 வாரங்களாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்..." நோட்டீஸ் குறித்து 'கமல்ஹாசன்' விளக்கம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 வாரங்களாக நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

"நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை"... "2 வாரங்களாக நானே தனிமையில் தான் இருக்கிறேன்..." நோட்டீஸ் குறித்து 'கமல்ஹாசன்' விளக்கம்...

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் வீட்டில் நேற்று இரவு கொரோனா முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தல் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கமலின் பழைய முகவரி என தெரியாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் சிறிய தவறு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில். கமல்ஹசன்  வெளியிட்ட அறிக்கையில், "என் இல்லத்தின் வெளியே ஒட்ப்பட்டிருந்த சுவரோட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே.

எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும் அன்புள்ளம் கொண்டோர் அனைவரும் அவ்வாறே செய்யவும் கேட்டுக் கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

CORONA, ISOLATION, KAMALHASSAN, PAST 2 WEEKS