“நானா கொளுத்திக்கல!!”.. ‘லாக்டவுனில் நடந்த காதல் திருமணம்!’.. ‘ஒரே மாதத்தில் நடந்த கோர சம்பவம்’!.. ‘இளம் பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரத்தை அடுத்த வானூர் பரங்கனியைச் சேர்ந்த ஜீவா என்கிற 21 வயது இளைஞர், நயினார் பாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரியை காதலித்து வந்த நிலையில், ஊரடங்கால் காதலியைக் காணாமல் தவித்துள்ளார்.
பின்னர், ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர், கடந்த ஜூன் 3-ஆம் தேதி ராஜேஸ்வரியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தற்போது ராஜேஸ்வரி தீக்குளித்ததாகக் கூறி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரித்தபோது, ராஜேஸ்வரியின் வீட்டாரிடம், ராஜேஸ்வரி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாகவும், தான் காப்பாற்ற முயன்றதாகவும் கூறியுள்ளார் ஜீவா. ஆனால் உடலில் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில், ராஜேஸ்வரி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடி கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதன்படி, “நானாக கொளுத்திக்கல.. என் வீட்டுக்காரர் ஜீவாதான் என் மேல மண்ணெண்ணை ஊத்தி உயிரோடு தீ வைத்து கொளுத்தினாரு” என ராஜேஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்ததால், தான் நகை, பணம் என பெரிதாக வரதட்சணை எதுவும் கொண்டு வரவில்லை எனக் கூறி, முறையாக வேலைக்கு போகாத ஜீவா, தன்னை வரதட்சணை வாங்கிவரச் சொல்லி வற்புறுத்தி வந்ததாகவும், பின்னர் இது தொடர்பாக கடந்த 3-ஆம் தேதி இரவு, இருவருக்கும் இடையே எழுந்த வாக்குவாதத்தினை அடுத்து ஜீவா, தன் மீது மண்ணெண்ணை ஊற்றி கொளுத்தியதுடன், இதைப் பற்றி வீட்டில் சொன்னால், தனது சகோதரன் மற்றும் தந்தையை கொன்றுவிடுவதாக ஜீவா மிரட்டியதாகவும் ராஜேஸ்வரி அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்