எப்போதும் ‘போனில்' பேசிக்கொண்டே இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ‘கொடூரம்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எப்போதும் போனில் பேசிக்கொண்டே இருந்ததால் சந்தேகத்தில் மனைவியை கணவன் தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் ‘போனில்' பேசிக்கொண்டே இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த ‘கொடூரம்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த வடசேரி அருகே காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கமலா. இவர்களுக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி கிராமத்தில் விவசாய வேலைகள் பார்த்து வருகிறார். கமலா திருச்சியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இதனால் தொழில் ரீதியாக கமலா பலரிடம் போனில் பேசி வந்துள்ளார். இதைப் பார்த்து சந்தேகப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, கமலாவிடம் அடிக்கடி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கமலா வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போதும் அவர் போனில் பேசி வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு ஜவுளிக் கடைகள் எல்லாம் இயங்க ஆரம்பித்ததால், கமலா மீண்டும் வேலைக்கு செல்ல நினைத்துள்ளார். ஆனால் அவரை வேலைக்கு போக வேண்டாம் என கிருஷ்ணமூர்த்தி தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி ‘நீ உயிரோடு இருந்தால்தானே கண்ட ஆண்களுடன் போனில் பேசுவ’ என அருகில் இருந்த பெட்ரோலை கமலா மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனால் கமலா அலறி துடித்துள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்தி மீது லேசாக தீப்பற்றியுள்ளது. பட்டப்பகலில் வீட்டுக்குள் கணவன், மனைவி அலறியதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த கமலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

லேசான தீக்காயங்களுடன் கிருஷ்ணமூர்த்தி உயிர் தப்பினார். இதனை அடுத்து கமலாவின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி மீது எழுந்த சந்தேகத்தால் அவரை தீ வைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan

மற்ற செய்திகள்