‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ?’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை பெருங்குடியில் நண்பர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘என் ஃப்ரெண்ட் மேலயே நீ?’... ‘கணவனின் பகீர் காரியம்’... 'சென்னையில் உறைய வைக்கும் சம்பவம்'!

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்தவர் 30 வயதான உதயகுமார். இவரின் மனைவி 25 வயதான மணிமேகலை.  இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான உதயகுமார், தினமும் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, தனது வீட்டு வாசலில் அமர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல் உதயகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டு வாசலில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட மணிமேகலை தனது கணவரை திட்டியதுடன் அவரது நண்பர்களையும் வசைப்பாடிவிட்டி வீட்டிற்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து மணிமேகலை வீட்டில் உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, உதயகுமாரின் நண்பர் மாணிக்கவேல் என்பவர் வீட்டினுள் நுழைந்துள்ளார். அப்பொழுது மாணிக்கவேலை மணிமேகலை திட்டியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாணிக்கவேல், நண்பரின் மனைவி என்றும் பாராமல் தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால்  மனமுடைந்த மனிமேகலை இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணிக்கவேலை அழைத்து விசாரித்த போலீஸார், எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த கணவர் உதயகுமார் ஆத்திரமடைந்தார். பின்னர் வீட்டிற்கு சென்ற அவர், மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது, கத்தியால் மணிமேகலையைக் குத்தியதாகத் தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மணிமேகலையை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை உயிரிழந்தார். மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக உதயகுமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த உதயகுமாரை பெங்களூரில் கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MURDERED, CHENNAI, HUSBANDANDWIFE