'மனைவி, மகள்ங்குற அக்கறை வேணாம்?'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?'..கணவர் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மனைவி, குழந்தை காணாமல் போய் 10 நாள் ஆன பிறகு இளைஞர் ஒருவர் போலீஸில் புகார் அளித்திருப்பது, போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'மனைவி, மகள்ங்குற அக்கறை வேணாம்?'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க?'..கணவர் செய்த காரியம்!

சென்னை ஜாஃபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி பானு. இந்த தம்பதியருக்கு விசாக என்கிற நான்கரை வயது மகள் உள்ளார். கடந்த 13-ஆம் தேதி, திருச்சியில் இருந்து சென்னை காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் நிகழ்ந்த கலந்தாய்வுக்காக சம்பத்குமாரின் தங்கை வந்துள்ளார்.

அவரை சம்பத்குமாரின் மனைவி பானு, தன் குழந்தையுடன் சேர்த்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று, அப்பள்ளியில் டிராப் செய்திருக்கிறார். ஆனால் கலந்தாயவு முடிந்த பிறகு, கணவரின் தங்கையை மட்டும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு, பின்னாலேயே தானும் குழந்தை விசாகாவும் இருசக்கர வானகத்தில் வருவதாக பானு கூறியுள்ளார்.

ஆனால், வீட்டிற்கு திரும்பியதோ, சம்பத்குமாரின் தங்கை மட்டும்தான் என்றும், தன் மனைவி மற்றும் குழந்தை திரும்பவில்லை என்றும், ஏறக்குறைய 10 நாட்கள் கழித்து சென்னை மெரினா காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், போலீஸார் சம்பத்குமாரின் மீதும் சந்தேகப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

HUSBAND, POLICE, WIFE