தேர்தல் முடிவுகள்: திருவாரூரில் அசத்தி காட்டிய தம்பதி.. மிரண்டு போன அரசியல் கட்சிகள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருவாரூர்: நகராட்சி தேர்தலி கணவன், மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்று உற்சாகமடைந்தனர்.

தேர்தல் முடிவுகள்: திருவாரூரில் அசத்தி காட்டிய தம்பதி.. மிரண்டு போன அரசியல் கட்சிகள்

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடந்து முடிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 57,746 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இன்று 22ம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கையானது, தமிழகம் முழுவதும் 279 மையங்களில் நடைபெறுகிறது.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கைப்பற்றியுள்ளது.  ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 9 வார்டுகளில் அமமுக வெற்றிபெற்றுள்ளது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கோட்டையாக கருதப்பட்ட பல்வேறு இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியுள்ளது. சேலம் மாநகராட்சியில் இதுவரை 12 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

Husband and wife win in Thiruvarur urban local body election

அந்தவகையில் திருவாரூர் நகராட்சி தேர்தலில் 1வது வார்டில் போட்டியிட்ட கலியபெருமாள் மற்றும் 2வது வார்டில் போட்டியிட்ட மலர்விழி ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி ஆவார்கள். இதையடுத்து வெற்றி பெற்ற தம்பதியை கிராம மக்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர். மேலும், கோவை கருமத்தம்பட்டி நகராட்சியில் 14 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 27 வார்டுகளில் 14 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று கருமத்தப்பட்டி நகராட்சியை தனது வசமாக்கியுள்ளது.

Husband and wife win in Thiruvarur urban local body election

மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 21 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திருச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் தி.மு.க. வேட்பாளரை 3 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் போட்டிகள் அரசியல் கட்சியினரிடையே நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

URBAN LOCAL BODY ELECTION, THIRUVARUR, AIADMK, HUSBAND, WIFE, VICTORY

மற்ற செய்திகள்