‘வீட்டு வாசலில்’... ‘தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி’... ‘இளைஞர்களால் நடந்த பயங்கரம்’... ‘2 ஆண்டுகள் கழித்து தெரியவந்த அதிர்ச்சி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வீட்டு வாசலில் தூங்கிக்கொண்டிருந்த இளம் தம்பதியை கொலை செய்து, நகைகளை திருடிச் சென்ற இளைஞர்களான கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வீட்டு வாசலில்’... ‘தூங்கிக் கொண்டிருந்த இளம் தம்பதி’... ‘இளைஞர்களால் நடந்த பயங்கரம்’... ‘2 ஆண்டுகள் கழித்து தெரியவந்த அதிர்ச்சி’!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி ஊராட்சியினைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் ரமேஷ் (வயது 36). இவரது மனைவி லதா ( வயது 33). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து பெரகம்பி வாழையூர் சாலையில் உள்ள இவரது தோட்டத்தில் புதிதாக வீடுகட்டி  இளம் தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி இந்த தம்பதி வீட்டு வாசலில் கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அடுத்த நாள் செவ்வாய் கிழமை காலை அப்பகுதியில் சென்றவர்கள் வீட்டின் வெளியே கணவன்-மனைவி ரத்த காயங்களுடன் கிடப்பதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

லதா பலத்த காங்களுடன் சடலமாகவும், ரமேஷ் ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிசிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கணவர் ரமேசும் உயிரிழந்தார். இது குறித்து சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அதிகாலையில் மர்மகும்பல் அரிவால் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை தாக்கியுள்ளனர்.

தம்பதி இருவரும் இறந்துவிட்டதாக நினைத்து, கொள்ளையர்கள் 10 சவரன் நகை மற்றும் ரமேசின் இருசக்கர வாகனத்தினையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் கொலையான ரமேஷின் திருடுப் போன இருசக்கர வாகனம் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் விபத்து ஏற்பட்டபோது, அதனை ஓட்டி வந்தது, வாழையூர் பகுதியினைச் சேர்ந்த பழனிசாமி ( வயது 21) என்பது தெரியவந்தது.

அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்ததில் பழனிசாமி மற்றும் அவரது நண்பர் நிசாந்த் (வயது 21) இருவரும் சேர்ந்து நகைக்காக தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து, பழனிசாமியின் தம்பி பெருமாளை கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CRIME, MURDER, COLLEGESTUDENT, TRICHYWOMANDEATH, HUSBAND AND WIFE, YOUTH