777 Charlie Trailer

வரதட்சணை கொடுமையால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. கணவர், மாமியாருக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் மதுரை கோர்ட் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில் இன்று மகிளா நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமையால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. கணவர், மாமியாருக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் மதுரை கோர்ட் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

Also Read | 6 மணி நேரத்துல இவ்வளவு முட்டையா?.. கேரளாவில் நடந்த அதிசயம்.. வியந்துப்போன கால்நடை மருத்துவர்கள்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கும் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்றும் இருக்கிறது. திருமணமானது முதல் ராஜசேகர் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனிடையே திருமணமான அடுத்த வருடம் அதாவது 2011 ஆம் ஆண்டு ராஜ சேகரின் மனைவி தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

வழக்கு

திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அப்பெண்ணின் உறவினர்கள் ராஜ சேகரும் அவரது தாய் சகுந்தலா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியிருந்தனர். இதனையடுத்து, இருவர் மீதும் வரதட்சணை கேட்டு மிரட்டியதாக சமயநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு மதுரை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய ராஜசேகர் மற்றும் அவரது தாயார் சகுந்தலா ஆகிய இருவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனையும், ராஜசேகருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், தாயார் சகுந்தலாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Husband and inlaw jailed for 7 years in dowry case

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோருக்கு மதுரை மகிளா நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருப்பது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தீர்வல்ல

எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.

மாநில உதவிமையம் : 104 .

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.

Also Read | "பொண்டாட்டி தொல்லையிலிருந்து விடுபட.. மரத்தை சுற்றி பரிகாரம் செய்யும் கணவர்கள்".. இது புதுசா இருக்கே..எங்கப்பா இது?

HUSBAND, DOWRY CASE, வரதட்சணை கொடுமை, மனைவி, கணவர்

மற்ற செய்திகள்