VIDEO:“பேய் மழையால் சோகம்!”.. “உருக்குலைந்த கோலத்தில் சரிந்து விழும் வீடு”.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்து காரணமாக ஐ.டி.ஓ பகுதியில் உள்ள குடிசைவாழ் பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்த சம்பவம் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.
குறிப்பிட்ட பகுதியில் கழிவு நீர் இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தோடியபடி இருக்க, பள்ளத்தின் அருகே உள்ள கட்டிடம் திடீரென சரிந்து முழுவதுமாக சிதைந்து அந்த பள்ளத்தில் விழுகிறது. இந்த சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் கட்டிடத்தில் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, டெல்லி-என்.சி.ஆரின் சில பகுதிகளில் மிதமான மழையும் அதிகாலை 5:30 மணி வரை, சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.9 மிமீ மழையும் பதிவாகியதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக வலைத்தளங்களில்
दिल्ली के आईटीओ के पास अन्ना नगर में पानी में कई मकान बह गए ,बारिश के पहले न नाले साफ हुए सीवर,इसलिए ये हाल है,राजधानी की इससे बदतर हालत क्या हो सकती है pic.twitter.com/Oq66qV7xD7
— Mukesh singh sengar मुकेश सिंह सेंगर (@mukeshmukeshs) July 19, 2020
பரவி வருகின்றது. மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
மற்ற செய்திகள்