வேற லெவலில் வைரலாகும் புதுமனை புகுவிழா அழைப்பிதழ்! end பஞ்ச் தான் ஹைலைட்டே
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட ஏதாவது விஷேச நிகழ்ச்சிகள் என வந்து விட்டால், அந்த இடமே படு ஜோராக இருக்கும்.
குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் அங்கே சூழ்ந்து கொண்டு அந்த விஷேச நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக்க மாற்றவும் முயற்சி செய்வார்கள்.
அதே போல, தங்கள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளவும் ஏரளாமானோரை அழைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கடமையாகும்.
அதிலும் பத்திரிக்கை கொடுத்து அவர்களை வரவேற்று வருவதும் நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். திருமண நிகழ்ச்சிக்கு வீடு வீடாக போய் பத்திரிக்கை கொடுப்பது போல, புதுமனை புகுவிழாவிற்கும் பலர் பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்களை அழைக்கவும் செய்வார்கள்.
அதிலும் குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் திருமண பத்திரிக்கை தொடங்கி புதுமனை புகுவிழா பத்திரிக்கைகள் வரை மிகவும் வித்தியாசமாக அதே வேளையில் அனைவரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையிலும் உருவாக்குவார்கள். அப்படி ஒரு புதுமனை புகுவிழா பத்திரிக்கை தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி, பலரையும் நெகிழ வைத்தும் வருகிறது .
இது தொடர்பாக வைரலாகி வரும் புதுமனை புகுவிழா பத்திரிக்கையில் முதல் லைனில் "பால் காய்ச்சப் போறோம்" என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, "வீட்டை கட்டிப் பாருங்கன்னு சொல்லுவாங்க. கல்யாணம் பண்ணிட்டோம் இப்ப வீட்டையும் கட்டிட்டோம்" என குறிப்பிட்டு தங்களின் வீட்டின் முகவரி உள்ளிட்ட விவரங்களையும் குறிப்பிட்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணி முதல் 10:30 முதல் புதுமனை புகுவிழா நடைபெறும் என்ற விவரத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் சுவாரஸ்யமாக, "விடியற்காலை வர முடியாது என்பதற்காக விடிஞ்சதுக்கு அப்புறமா வச்சிருக்கோம். வந்து எங்கள் சந்தோஷத்தை பகிர்ந்துக்க ஆசையுடன் அழைக்கிறோம். உங்களை வரவேற்க வாசலில் நானும், என் மனைவியும் எங்கள் பிள்ளைகளுடன் காத்திருக்கிறோம். வருவீங்கல்ல" என குறிப்பிட்டு தங்களின் பெயர்கள் மற்றும் குழந்தைகளின் விவரங்களையும் அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த புதுமனை புகுவிழா பத்திரிக்கையில் மிக மிக அசத்தலான விஷயம் என்னவென்றால், தங்கள் வீட்டுக்காக வியர்வை சிந்தி உதவிய அன்புள்ளங்கள் எனக் குறிப்பிட்டு, தலைமை மேஸ்திரி, மேஸ்திரி, கொத்தனார், கட்டுமான பொருட்கள் உதவி செய்தவர்கள், கம்பி கட்டுனர், தச்ன், மின் வல்லுநர், வர்ண கலைஞர், தரை அழகு, வெல்டிங் ஒர்க்ஸ், UPVS ஒர்க்ஸ், நிதி உதவி கொடுத்த வங்கி வரை என ஒரு வீடு வைப்பதற்கு யாரெல்லாம் உதவி செய்வார்களோ அவர்களின் அனைவரின் பெயர்களையும் இந்த பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது தான் இது காண்போர் பலரையும் மனம் நெகிழ வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
Also Read | சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு.. மண்டல, மகர பூஜையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
மற்ற செய்திகள்