எப்படி இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்?.. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | லாட்டரியில் ஜாக்பாட்.. துள்ளிக்குதித்து கணவனுக்கு ஷாக் கொடுத்த மனைவி.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த இடை தேர்தலில் அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும் தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிட்டனர். இதில் ஈவிகேஸ் இளங்கோவன் வெற்றிபெற்றிருந்தார். தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
Images are subject to © copyright to their respective owners.
உடல்நலக்குறைவு
இந்த சூழ்நிலையில் கடந்த 15 ஆம் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் நலமாகி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
மருத்துவமனை அறிக்கை
இந்த சூழ்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,"ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார். இதய பாதிப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read | ஓடிப்போய் போலீஸுக்கு சல்யூட் அடிச்ச சிறுமி.. காவல்துறை பகிர்ந்த Cute வீடியோ..!
மற்ற செய்திகள்