கவலையில் இருந்த கல்யாண வீடு.. கடவுள் மாதிரி வந்த ஆட்டோ டிரைவர்.. நெகிழ வைத்த நேர்மை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆட்டோவில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | அண்ணனுக்காக கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. களேபரம் ஆன மண்டபம்..!
விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி-முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு கோயிலில் இன்று காலை திருமணம் நடந்தது. இதனை அடுத்து மற்ற வைபவங்கள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதனால் மணப்பெண்ணின் பெற்றோர்கள் ராமர் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் ராமர் அவர்களை திருமண மண்டபத்தில் இறக்கி விட்டுவிட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். சுமார் 1 மணி நேரம் கழித்து மீண்டும் மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார். அதை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் இருந்துள்ளது.
அப்போது அவருக்கு, காலை திருமண மண்டபத்தில் சவாரி இறக்கி விட்டது நினைவுக்கு வந்துள்ளது. உடனே பையை எடுத்துக்கொண்டு திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அங்கு நகையை தவற விட்ட கவலையில், மணப்பெண்ணின் பெற்றோர் கண்ணீருடன் சோகத்தில் இருந்துள்ளனர். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் ராமர் நகை பையை வழங்கினார்.
போலீசார் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநரின் இந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read | ‘அது விபத்து இல்ல’.. டிரைவர் உயிரிழந்த வழக்கில் அதிரடி திருப்பம்.. சரணடைந்த இளைஞர் சொன்ன பரபரப்பு தகவல்..!
மற்ற செய்திகள்