‘தீவிரவாத அச்சுறுத்தலால்’... ‘தொடரும் சோதனைகள்’... ‘உஷார்நிலையில் காவல்துறை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலீசாரின் சோதனை தொடரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘தீவிரவாத அச்சுறுத்தலால்’... ‘தொடரும் சோதனைகள்’... ‘உஷார்நிலையில் காவல்துறை'!

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய போலீசாரின் சோதனை மாநிலம் முழுவதும் சுமார் 18 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களும் உஷார் படுத்தப்பட்டு இன்று இரவும் சோதனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை, கேரளா எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், விமான நிலையம், காந்தி புரம், டவுன் ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, லாட்ஜ்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 ஈரோடு, நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் எக்மோர் ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சோதனை நடந்து வருகிறது. இவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், வழிப்பாட்டு தளங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ALERT, POLICE, TERRORIST