இந்த 4 'மாவட்டத்துக்கு' மட்டும்... 'ஊரடங்க' நீட்டிக்குற 'பிளான்' இருக்கா?... இன்னைக்குள்ள ஒரு 'முடிவ' சொல்லுங்க!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா வைரசிற்கு 27 ஆயிரத்து 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல, நாளுக்கு நாள் இங்கு இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருந்து பலர் இ பாஸ் மூலம் தங்களது சொந்த ஊர் சென்று வருகின்றனர். இதனால் மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா பரவும் அபாயமுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடுமையான முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பொதுநல வழக்குகளை காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்அரசின் நடவடிக்கை குறித்து நீதிபதிகள் கேட்டனர். அதே நேரத்தில் சென்னை மற்றும் சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய நடைமுறை ஏதேனும் அமல்படுத்தப்படவுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பு வக்கீல், தற்போதுள்ள நடைமுறைகளை அரசு தீவிரமாக பின்பற்றி வருகிறது. அரசாணையில் கூறப்பட்ட தளர்வுகள் தவிர மற்ற அனைத்தும் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம் உள்ளதா என்பது குறித்து இன்று பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்