இனி இந்த மாதிரியான ‘விளம்பரங்கள்’ டிவியில் போட தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை ‘அதிரடி’ உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாசத்தை பரப்பும் வகையிலான விளம்பரங்களுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சினிமாவுக்கு சென்சார் இருப்பதுபோல ஓடிடி-யில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்களுக்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில், இனி டிஜிட்டல் மீடியாக்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என தெரிவித்தது.
அதாவது ஆன்லைன் செய்தி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் ஆகியவை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரப்படும் என்ற மத்திய அரசு குறிப்பிட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ஆபாசத்தை பரப்பும் வகையிலான டிவி விளம்பரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. அதில், கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள் தொடர்பான விளம்பரங்கள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசானை திரவியம் தொடர்பான ஆபாச விளம்பரங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபாசத்தை பரப்பும் வகையிலுள்ள பாலியல் பிரச்னை தொடர்பான மருத்துவ விளம்பரங்களுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்