'ஸ்டாலின் நல்லா தான் ஆட்சி பன்றாரு, ஆனா'... 'ஏங்க இதெல்லாம் ஒரு வழக்கா'?... வழக்கு போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கிளைமாக்ஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இதெல்லாம் அபத்தமான வழக்கு எனக் கூறி வழக்கை நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

'ஸ்டாலின் நல்லா தான் ஆட்சி பன்றாரு, ஆனா'... 'ஏங்க இதெல்லாம் ஒரு வழக்கா'?... வழக்கு போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி கிளைமாக்ஸ்!

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரானோ இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், பரவலை கட்டுப்படுத்தத் தமிழக முதல்வர் ஸ்டாலின் சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, சுற்றுப்பயணம் செல்வது எனச் சுழன்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல தன்னுடைய உடல்நலனையும் கவனத்தில் கொள்ளாமல், கடந்த மே 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை கோவையில் உள்ள ஈ.எஸ்.ஐ மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக முழுக்கவச உடையணிந்து கொரானோ வார்டிற்கு சென்று வந்தார். அதேபோல தமிழக மக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறை உள்ளதுபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் நலனிலும் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

High Court imposed a fine on the petitioner for cm MK Stalin issue

இதன் காரணமாகத் தமிழக முதல்வரை அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர ஞாயிற்றுக் கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது எனத் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக்கோரி மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து செய்தனர்.

High Court imposed a fine on the petitioner for cm MK Stalin issue

நீதிபதிகள் அதோடு நிற்காமல் இதுபோல அபத்தமாகத் தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டிற்குப் பொதுநல வழக்கு தொடர தடைவிதித்தும் உத்தரவிட்டார்.

மற்ற செய்திகள்