'எத்தன நியூ இயரை பாத்துருக்கும்'.. ‘இப்படி வெறிச்சோடி கடக்குதே!’.. ஆமா.. சென்னை மெரினா பீச் தான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புத்தாண்டு என்றாலே சென்னைவாசிகளை பொறுத்தவரை சென்னை மெரினா பீச் தான். இரவு முழுவதும் பாடல் , பேச்சு, கதை என நள்ளிரவு 12 மணி வரை நவீன கதாகலாட்சேபம் செய்து கொண்டிருப்பார்கள்.
புது வருடம் பிறந்ததும் இரவு 12 மணி ஆனவுடன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியும், ஆரவாரத்துடன் கூச்சல் போட்டும் முன்பின் தெரியாதவர்களுக்கு அன்பின்பால் இனிப்புகளை பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லி நெகிழ்ந்து, கட்டி அணைத்தும் கைகுலுக்கியும் மகிழுந்து புதுவருடத்தை வரவேற்பார்கள்.
இப்படி ஒவ்வொரு புத்தாண்டின் வரவேற்பறையாக திகழும் சென்னை மெரினா கடற்கரை இந்த வருடம்
The usually bustling Marina Beach wears a deserted look on the New Year's Eve as the Tamil Nadu government denied public entry to all the beaches in view of the pandemic. @IndianExpress pic.twitter.com/rA3KXecpIZ
— Janardhan Koushik (@koushiktweets) December 31, 2020
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வழியின்றி தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்காரணமாக 2021 ஜனவரி 1-ஆம் நாள் தொடங்கியும் நள்ளிரவில், வழக்கமான புத்தாண்டுகளில் ஆரவாரமாக திகழும் மெரினா பீச்சில், ஆளரவம் இல்லாத நிலை காணப்படுகிறது.இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மற்ற செய்திகள்