Video: “சித்ரா மேல சந்தேகப்பட்டு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க..”.. “இந்த சைகோவ வெளிய விட்டா 200% இதான் நடக்கும்!” - ரோஹித் பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் நசரத்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சித்ராவை ஹேம்நாத் தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததே அவரது தற்கொலைக்கு காரணம் என காவல்துறை தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமின் கேட்டு ஹேமந்த் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் இந்த அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனிடையே ஹேமந்தின் 10 ஆண்டுகால நண்பரான சையது ரோஹித் ஹேமந்துடனும் ஹேமந்தின் தந்தையுடனும் பல்வேறு நேரங்களில் பேசும்போது பதிவான பல தகவல்களை ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.
அவற்றில் ஹேமந்த் ரோஹித்திடம், சித்ராவிடம் சக நடிகருடன் நடனமாடியது பற்றி கொஞ்சியது போல் கேட்டதாகவும், சித்ரா இறப்பதற்கு முன்பாக போதை மருந்து உட்கொண்டதாகவும், உண்மையில் சித்ராவின் தாயார் கொடுத்த அழுத்தம் தான் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாகவும் குறிப்பிடும் ஹேமந்த் யாரிடமும் இவற்றை கூற வேண்டாம் என்றும் சொல்கிறார்.
அத்துடன் ஹேமந்தின் நண்பர்கள் பலரும் ரோஹித்திடம் ஹேமந்துக்கு எதிராக போலீஸ் விசாரணையில் எதையும் கூற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளும் ஆடியோக்களும் ரோஹித்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டிகளை அளித்து வரும் ரோஹித், ஹேமந்த் சித்ராவை சந்தேகப்படுவது, அடித்துத் துன்புறுத்துவது குறித்த மேலும் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “ஹேமந்த் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தான். சித்துவை ஹேமந்த் தினமும் ஒருவருடன் சேர்த்து வைத்து சந்தேகப்படுவது, போனில் யாரிடம் பேசுகிறர் என வாங்கி சோதனை செய்வது, கொடூரமாக சித்ராவை கையாளுவது என பல விஷயங்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹேமந்த் சித்ராவிடம் செல்லமாகவே எதையும் கேட்க மாட்டார். காரை உடைப்பது, அடிப்பது, கடிப்பது என இருந்த ஹேமந்த் சித்ராவை பல சமயங்களில் பிராண்டி, குதறி வைத்துள்ளார். அசிங்கமாகவே பேசுவார். குடித்துக் கொண்டே இருப்பார். அவன் ஒரு சைகோ. அவனை வெளியேவிட்டீங்கனா 200 சதவீதம் இப்படி நடக்க வாய்ப்பிருக்கு.
ஹேமந்தின் கேரக்டர் பாதிக்கு மேல் சித்ராவுக்கு தெரியவந்தும், மிகவும் நல்ல-துணிச்சலான பெண்ணான சித்து ஹேமந்தின் மீதான உண்மையான காதலால் ஹேமந்தை பிரியாமல் இருந்தார். ஆனாலும் சித்ராவின் கன்னித்தன்மை மீது சந்தேகப்பட்ட ஹேமந்த், என் மனைவியான டாக்டர் அனுவிடமும், இன்னொரு மருத்துவரிடமும் சித்ராவுக்கு விர்ஜினிட்டி சோதனை செய்யச் சொல்லி கேட்டார். இதைப் பற்றி அழுதுகொண்டே சித்து என்னிடம் பகிர்ந்தார். இப்படி கேட்கு ஒருவன் எந்த அளவுக்கு சித்ராவை கொடுமை பண்ணியிருப்பான்!” என ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்