'சித்ராவின் முடிவுக்கு இதுதான் காரணமா'?... 'என்ன பதில் சொல்ல போறீங்க ஹேம்நாத்'... 'ஆர்.டி.ஓ வரிசையா அடுக்கிய கேள்விகள்'... என்ன சொன்னார் ஹேம்நாத்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சித்ராவின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், அவர் ஹேம்நாத்திடம் பல கேள்விகளை முன்வைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னதிரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், சித்ராவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட தகவல் அப்போது தான் வெளியானது.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், ஹேம்நாத், சித்ராவை மனதளவில் கடுமையாகத் துன்புறுத்தி இருப்பது தெரிய வந்தது. அதன்பின்னர் போலீசார் ஹேம்நாத்தை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். முன்னதாக திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்துவதற்காக ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, பொன்னேரி சிறை அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பினார்.
இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் ஹேம்நாத்தை சிறைத்துறை காவலர்கள் அழைத்து வந்தனர். விசாரணைக்கு வந்த ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ பல கேள்விகளை முன்வைத்துள்ளார். முக்கியமாக சித்ரா தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்ற கோணத்திலும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் பதிலளித்த நிலையில், பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது ஹேம்நாத் அளித்த தகவல்களை வாக்குமூலமாக ஆர்.டி.ஓ. பதிவு செய்துள்ளார். மதியம் 12 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது. முழு விசாரணை முடிந்த பின்னர் ஆர்.டி.ஓவின் கேள்விகளுக்கு ஹேம்நாத் என்ன பதில் கூறினார் என்பது குறித்துத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சித்ராவிடம் நெருங்கிப் பழகிய நடிகைகளிடமும் அவருடன் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகர்களிடமும் நாளை ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். முன்னதாக சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் ஏற்கனவே ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்