‘சென்னைக்கு அருகே கரையை கடக்கும் புயல்’!.. மறுபடியும் ‘கனமழை’ பெய்யுமா..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ‘புதிய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இன்னும் எத்தனை நாளைக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

‘சென்னைக்கு அருகே கரையை கடக்கும் புயல்’!.. மறுபடியும் ‘கனமழை’ பெய்யுமா..? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட ‘புதிய’ தகவல்..!

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. இது இன்று (11.11.2021) மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Heavy rain will continue in Chennai, Says IMD

குறிப்பாக சென்னையில் நேற்றிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து விட்டு விட்டு சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy rain will continue in Chennai, Says IMD

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், ‘தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தெற்கு ஆந்திரா-வட தமிழக கடற்கரை பகுதிகளில் நகர்ந்து சென்னை அருகே கடந்து செல்லும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்’ என தெரிவித்துள்ளார்.

Heavy rain will continue in Chennai, Says IMD

தொடர்ந்து பேசிய அவர், ‘அடுத்து வரும் 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Heavy rain will continue in Chennai, Says IMD

சென்னையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணிநேரத்துக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும், சில பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

RAIN, HEAVYRAIN, CHENNAIRAINS, TNRAINS

மற்ற செய்திகள்