'5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை இருக்கும்'... 'லிஸ்டில் இருக்கும் மாவட்டங்கள்'... சென்னை வானிலை ஆய்வு மையம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்5-ந் தேதி வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை 3-ந் தேதி சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.
4-ந் தேதி சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். 5-ந் தேதி வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
6-ந் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும், எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்