மீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![மீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..! மீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/heavy-rain-expected-in-coastal-districts-says-meteorological-center-thum.jpg)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் நவம்பர் 12ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்