‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும், சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பாலசந்திரன், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.