'இந்த மாவட்டங்களில் எல்லாம்'... 'இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இந்த மாவட்டங்களில் எல்லாம்'... 'இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு'... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அத்துடன் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்