எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை... தமிழகத்தில் கனமழை நீடிக்கும்... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வடலூர், சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, தஞ்சை, திருவாரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது