'தமிழகத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி...' 'மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு...' சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸ் பரவலில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் அளித்துள்ளார். மேலும்  தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்து, இந்தியாவில் இரண்டாவது கொரோனா பாதித்த மாநிலமாக திகழ்கிறது.

'தமிழகத்தில் இன்று புதிதாக 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி...' 'மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்வு...' சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்...!

மேலும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் துபாயில் இருந்து வந்தவர். அதேவேளையில் 8 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும்  "நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிரிழக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம். இரண்டு முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே வீட்டிற்கு அனுப்புவோம்.  இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனை மையங்கள் உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.