1, நாட்டிலேயே அதிகபட்சமாக 194 பேர் கேரளாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் 19 பேர் குணம் அடைந்துள்ளனர். 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலும் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்ற 91 வயது, 88வயது என ஆகும் கணவன், மனைவி இருவரும் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
2, ஆந்திராவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட 2500 பேரை செல்போன் சிக்னலை வைத்து கண்காணிக்கப்படுகிறது. குடும்பத்தினரின் செல்போன் சிக்னல் 100 மீட்டரை தாண்டினால் உடனே அலார்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3, அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே வந்து கொடுக்கும் கடைகளுக்கான விபரங்களை 14 மண்டலங்களாக பிரித்து சென்னை மாநகராட்சி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விபரங்கள் கிரேட்டர் சென்னை முகநூல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
4, ஏப்.1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
5, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை கொரோனா தனிமை முகாமாக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் மனுவை மாநகராட்சி ஆணையரிடம் எம்எல்ஏ சேகர்பாபு வழங்கினார்.
6, தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 74 ஆக உயர்ந்துள்ளது.
7, கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ.80 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
8, சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்வோர் ரிப்பன் மாளிகையில் அனுமதி கடிதம் பெறலாம் என்றும், காலை 11 முதல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் அதற்கான அலுவல் நேரம் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.