இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

1, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த பெண் வீடு திரும்பிய நிலையில் , புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!

2, ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் அதனால்தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

3, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 30 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான விடுமுறை ஏப்ரல் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெவித்துள்ளது.

5, கடலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். எனினும் அவரது கொரோனா பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.

6, கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளது.

7, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 132 பேர் குணமடைந்துள்ளனர். 

8, தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும, டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

9, தமிழகத்தில் இதுவரை 15 மாவட்டங்களுக்கு மட்டுமே பரவியிருந்த கொரோனா, மேலும் 4 மாவட்டங்களுக்கு பரவி 19ஆக உயர்ந்தது.

10, இந்தியாவில் பிப்ரவரியில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வசூலாகியிருந்த ஜிஎஸ்டி வருவாய், மார்ச் மாதம் ரூ.97,597 கோடியாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.