“தற்கொலை பண்ல.. அடிச்சே சாவடிச்சுட்டான்” - கதறி அழுத தாய்!.. ஐஸ் பெட்டிக்குள் படுத்துக்கொண்ட தந்தை! .. களையிழந்த நடிகை சித்ரா வீடு!.. கண் கலங்க வைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நசரத் பேட்டையில் உள்ள தனியார் ஸ்டார் ஹோட்டலில் நேற்று (டிசம்பர் 09) அதிகாலை தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த நடிகை விஜே சித்ராவின் உடல் வைக்கப்படுவதற்காக, அவரது பெற்றோர் இருக்கும் கோட்டூர்புரத்தில் ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டிருந்தன.
அப்போது சித்ராவின் தந்தை, சித்ராவின் உடலை வைப்பதற்காக, இருந்த ஐஸ் பெட்டியில் படுத்துக்கொண்டார். அவரை அவரது உறவினர்கள் அப்புறப்படுத்தினர். இதேபோல் சித்ராவின் தாயார், கண்ணீர் மல்க வேதனையுடனும், விரக்தியுடனும் புலம்பியவை காண்போரின் நெஞ்சை உருக்கியது.
அப்போது பேசிய சித்ராவின் தாயார், “என் பொண்ணு தற்கொலை பண்ணவே இல்ல. அவன் அடிச்சு சாவடிச்சுட்டான். என்னால முடியல.. என்னால முடியல” என ஆவேசமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தார். அவரை உறவினர்கள் சமாதானப் படுத்த முயற்சித்தனர். மேலும் பத்திரிகையாளர்களிடம் அளித்த பேட்டியில். “அவன்(ஹேமந்த் ரவி) என் முன்னாடி இருந்தா, நானே அவன கொன்னுடுவேன்” என்று ஆவேசமாக பேசினார்.
மற்ற செய்திகள்