‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சீன அதிபரை சந்திப்பதற்காக 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்துள்ள பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..

சென்னை மாமல்லபுரத்தில் இன்று 11ஆம் தேதி மற்றும் நாளை 12ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் மோடி 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் கோவளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கும் பிரதமர் மோடி மாலையில் மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்துப் பேச உள்ளார். சென்னை வந்திறங்கியதும் தமிழிலும், சீன மொழியிலும் பிரதமர் மோடி உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்.

 

 

 

 

 

 

PMMODI, CHINA, XIJINPING, MAHABALIPURAM, CHENNAI, TAMIL, TWEET