அரையாண்டு தேர்வு நடக்குமா..? குழப்பத்தில் இருந்த மாணவர்கள்.. அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெறுமா என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.
இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டு அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அரங்குகளில் 50% பங்கேற்பாளர்களுடன் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 19ம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் 50% பங்கேற்பாளர்களுக்கு மிகாமல் கூட்டம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்