RRR Others USA

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை.. ஆனால்.. ஹெச் ராஜா பரபர பேட்டி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களை தமிழக மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த போது ஹெச் ராஜா கூறியுள்ளார்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை.. ஆனால்.. ஹெச் ராஜா பரபர பேட்டி

தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்:

சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்களை தமிழக மீனவர்கள் பயன்படுத்தினால் பிரச்சினை எழாது என்றவர், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

h raja says no objection of Udayanidhi Stalin as minister

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி

ராஜீவ் காந்தி  கொலை  வழக்கில் 7 பேரை விடுதலை செய்தால் காங்கிரஸ் கட்சி பிற மாநிலங்களில் ராஜீவ் கொலையாளிகளை பாஜக விடுதலை செய்ததாக குற்றம்சாட்டி பிரச்சாரம் மேற்கொள்ளும். எனவே, 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்  என்றார்.  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்ற H.ராஜா. இதுதொடர்பாக முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

h raja says no objection of Udayanidhi Stalin as minister

பக்தர்களிடம் அராஜகம்:

அதுமட்டுமல்லாமல், திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக எச் ராஜா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து கூறிய போது, இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்களிடம் மிகவும் அராஜகமாக நடந்து கொள்வதாக கூறியுள்ளார்.

h raja says no objection of Udayanidhi Stalin as minister

நடவடிக்கை எடுக்க வேண்டும்:

அதற்கு ஒருபடி மேலாக தமிழக அரசே சிலுவை அரசு என குற்றம் சாட்டினார். இதை சிஎஸ்ஐ சபை விழாவில் சென்று முதல்வர் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்துக்களுக்கு எதிராக சிலுவை யுத்தம் ஒன்று நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அராஜகம் செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முடிந்தால் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை அமைச்சரவை பதவியிலிருந்து அகற்று நடவடிக்கை வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொள்வதாக எச்.ராஜா கூறியுள்ளார்.

H RAJA

மற்ற செய்திகள்