ஒண்டிக்கட்டை, 3 நாளா ஆள காணோம்...! 'வாக்கிங் போன ஜாக்கி(நாய்) புதரை நோக்கி ஓட...' - follow பண்ணி போனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்யானை தாக்கி இறந்தவரின் சடலத்தை வளர்ப்பு நாயின் உதவியால் காவல்துறையினர் மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவசங்கரன் என்பவர் நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி, ஆத்தூரில் வசித்து வருகிறார். இவர் தினமும் காலை தனது வளர்ப்பு நாய் ஜாக்கியை அவர் பகுதியை சுற்றியுள்ள இடத்தில் வாக்கிங் கூட்டி செல்வது வழக்கம்.
எப்போதும் போலவே நேற்றும் நாய் ஜாக்கியும் சிவசங்கரனும் வாக்கிங் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஜாக்கி அமைதியின்றியும் புதர் மண்டியிருக்கும் இடத்தை நோக்கியும் பார்த்து கத்திகொண்டே இருந்துள்ளது.
சிவசங்கரன் எவ்வளவு தான் அழைத்தும் விடாப்பிடியாக இருந்துள்ளது வளர்ப்பு நாய் ஜாக்கி. இதனால் தன் நாய் காட்டும் இடத்திற்கு சென்ற சிவசங்கரனுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அங்கு ஒரு அழுகிய சடலம் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ந்த சிவசங்கரன் அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அழுகிய நிலையில் இருந்த சடலம், அதே ஊரைச் சேர்ந்த பழனியாண்டி என்பதும், யானை தாக்கியதில் இறந்திருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து கூறிய அப்பகுதி இளைஞர் ஒருவர், 'பழனியாண்டி தாத்தாக்கு 64 வயசு இருக்கும். ஒண்டிக்கட்ட, தனியாத்தான் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கார். மூணு நாளா அவர ஆளைக்காணோம், நான் அவர் சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டார் நினைச்சோம். ஆனா இப்படி அநியாயமா செத்துருக்கார். நைட்டுல இங்க அப்போ அப்போ யானை வரும், தெரியாம வெளியே வந்து யானைகிட்ட மாட்டியிருக்கார்' என கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்