'என்ன வார்த்த சொல்லிட்ட மா'... 'மணமகள் வாய் தவறி சொன்ன வார்த்தை'... 'விழுந்து விழுந்து சிரித்த சொந்தக்காரர்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண சடங்கின் போது மணமகள் வாய் தவறிச் சொன்ன வார்த்தை, அங்கிருந்த உறவினர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இந்தியக் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது ஒரு அந்தஸ்தைப் போலவே கருதப்படும் சூழல் இந்தியாவில் உள்ளது.
இந்தியாவில் ஒரு ஆடம்பர திருமணத்திற்கு ஆகும் செலவு 2 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய் என பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிகை கூறுகிறது. திருமணப் பத்திரிக்கைகளுக்கு மட்டுமே லட்சக் கணக்கில் செலவு செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் ஆடம்பரமாகச் செய்யும் திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் ஆட்டம் கண்டுள்ளது.
தற்போது எளிமையான முறையில் திருமணம் நடந்தால் போதும் என்ற நிலைக்கே பலரும் வந்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது பொது முடக்க நேரத்தில் தேவாலயங்கள், மற்றும் கோவில்களில் எளிமையான முறையில் பல திருமணங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேவாலயம் ஒன்றில் திருமணம் செய்ய இரு குடும்பத்தாரும் கூடி இருந்தார்கள். அப்போது பாதிரியார் திருமணத்திற்கான சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மணமகளிடம் திருமண வார்த்தைப்பாட்டைச் சொல்லி, அதை மணமகளிடம் திரும்பச் சொல்லச் சொன்னார். அந்த வகையில் ''இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கமாயிருந்து, வாழ்நாளெல்லாம் நேசிக்கவும் மதிக்கவும்'' எனச் சொல்வதற்குப் பதிலாக 'மிதிக்கவும்' என வாய் தவறிச் சொல்லி விட்டார். உடனே அடுத்த நொடி அங்கிருந்த உறவினர்கள் மற்றும் திருமண வீட்டார் என அனைவரும் சிரித்து விட்டார்கள்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட மணமகள், அவராலும் சிரிப்பை அடக்க முடியாமல் தனது பிழையைத் திருத்திக் கொண்டு மீண்டும் சரியாகச் சொன்னார். ஆனால் மணமகனுக்கோ, என்னடா சொல்வது என்ற ரீதியில் அவரும் சிரிப்பை அடக்க முடியாமல் எப்படியோ அந்த சூழ்நிலையில் சமாளித்தார். இதனைத் திருமணத்திற்கு வந்த ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏது மிதிக்கணுமா ? 🤣🤣 pic.twitter.com/s1PES1ibMY
— Jeno M Cryspin (@JenoMCryspin) June 21, 2021
மற்ற செய்திகள்