“உதயா வந்து சொன்னதும்” .. LOVE MARRIAGE-னாலே கிரீன் சிக்னல்.. முதல்வர் ஸ்டாலின் சொல்லும் சீக்ரெட்ஸ்..! EXCLUSIVE VIDEO

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் தம்முடைய 70 ஆவது பிறந்த நாளை வரும் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடுகிறார்.

“உதயா வந்து சொன்னதும்” .. LOVE MARRIAGE-னாலே கிரீன் சிக்னல்.. முதல்வர் ஸ்டாலின் சொல்லும் சீக்ரெட்ஸ்..! EXCLUSIVE VIDEO

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வராக இருந்த திமுக மூத்த தலைவர் கலைஞர். மு.கருணாநிதியின் மகன் ஆவார். கலைஞரின் மறைவுக்கு பின், திமுக கட்சிக்காக செயல்பட்டு வந்த முக ஸ்டாலின், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து மக்கள் குறித்த பல பிரச்சனைகளில் நேரடியாக களத்தில் இறங்கி அதனை சரி செய்வதிலும் முக ஸ்டாலின் முனைப்பு காட்டி வருகிறார். இந்த நிலையில், தற்போது Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ளார். பிரபல கோபிநாத் இந்த நேர்காணலை செய்திருந்தார். 

இந்நிகழ்ச்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு தம் மறுபக்கம் குறித்தும், தம் குடும்பம் குறித்தும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “என் குடும்பத்தில் எல்லாருமே காதல் திருமணம் தான். என் மகன் உதயாவும் சரி, மகள் செந்தாமரையும் சரி காதல் திருமணம்தான் செய்துகொண்டார்கள். எங்கள் வீட்டில் மாறன் குடும்பத்திலும் சரி, செல்வம் குடும்பத்திலும் சரி, அமர்தம் குடும்பத்திலும் சரி பெரும்பாலும் காதல் திருமணம்தான்.

என்னிடம் வந்து தங்கள் காதல் திருமணம் குறித்த விருப்பத்தை உதயாவும் சரி, செந்தாமரையும் சரி, என்னிடமே முதலில் வந்து சொன்னார்கள். இந்நார் இந்நாரை காதலிப்பதாக விபரங்களை சொன்னார்கள். நான் என் மனைவியை அழைத்து விஷயத்தை சொன்னேன். ஆரம்பத்தில் அவங்க கொஞ்சம் எமோஷனல் ஆனாங்க. பின்னர் சமாதானம் பண்ணினோம். பிறகு அவர்களுக்கு காதல் திருமணம் செய்துவைத்தோம்,. மகனும் சரி, மகளும் சரி இப்பவும் எங்களை கேக்காமல் செய்வதில்லை. நாங்களும் அவங்களை ஆலோசிக்காமல் எதுவும் செய்றதில்லை” என கூறினார்.

MK STALIN, STALIN INTERVIEW, TN CM INTERVIEW

மற்ற செய்திகள்