'ஒரு ரூபாய்க்கு ஒத்த பைசா கூட கூட்டி விற்க மாட்டேன்...' 'கூடிப்போனா 100 ரூபாய் கிடைக்குது, அது போதும் எனக்கு...' கொள்கை மாறாத 'ஒரு ருபாய் இட்லி' பாட்டி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், 'ஒரு ரூபாய் இட்லி' பாட்டி, போதுமான வருமானம் இல்லை என்றாலும் சேவை மனப்பான்மையோடு தன் கொள்கை மாறாமல் இட்லி விற்று வருகிறார்.

'ஒரு ரூபாய்க்கு ஒத்த பைசா கூட கூட்டி விற்க மாட்டேன்...' 'கூடிப்போனா 100 ரூபாய் கிடைக்குது, அது போதும் எனக்கு...' கொள்கை மாறாத 'ஒரு ருபாய் இட்லி' பாட்டி...!

கோவை மாவட்டம் வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள்(85). கணவர் இல்லாத கமலாத்தாள் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் எந்தவித லாப நோக்கம் இன்றி சேவை மனப்பான்மையோடு ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது,  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வாடிக்கையாளர் குறைந்து போயினர். ஒருசிலர் மட்டுமே வந்து இட்லி வாங்கி செல்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பு வரைக்கும் நாள் ஒன்றுக்கு முன்னூறு ரூபாயிலிருந்து நானூறு ரூபாய் வரை கிடைத்துள்ளது.

ஆனால் ஊரடங்கு காரணமாக ஐம்பதில் இருந்து நூறு ருபாய் வரைக்கும் இட்லி விற்பனை ஆகிறது. இருந்தாலும் தனக்கு அந்த பணம் போதும் என்ற பெரிய மனதோடு இட்லி வியாபாரம் நடத்துகிறார். மளிகை கடைக்கார்கள் உள்ளிட்ட பலரும் ஊரடங்கை ஒரு காரணமாக கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையை ராக்கெட் உயரத்திற்கு உயர்த்தியுள்ளனர். ஆனாலும் இந்த 'ஒரு ரூபாய் இட்லி' பாட்டி, தனக்கு பணம் முக்கியமில்லை என்று தன் கொள்கையில் இருந்து விலகாமல், அதே ஒரு ரூபாய்க்கு இடலியை விற்று வருகிறார்.

மேலும் பேரனுக்கு தற்போது வேலை இல்லை என கூறும் பாட்டி, தான் யாரிடமும் உதவி கேட்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். உயர்ந்த உள்ளம் கொண்ட 'ஒரு ரூபாய் இட்லி' பாட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.