Bigg boss 6 tamil : "ராசா.. கோடி கும்புடு".. Confession Roomல இருந்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்த GP முத்து.! தலைவர் கேட்ட உதவியை செஞ்ச ஹவுஸ்மேட்ஸ்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg boss 6 tamil : "ராசா.. கோடி கும்புடு".. Confession Roomல இருந்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்த GP முத்து.! தலைவர் கேட்ட உதவியை செஞ்ச ஹவுஸ்மேட்ஸ்?

Also Read | புதுப் பொண்டாட்டி கூடவும் சண்டை.. பரிதாபமாக வெளியேறிய கோபி.! ஹனிமூன் போன மனுசனுக்கு இப்படி ஒரு நிலைமையா!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் கவனிக்கத்தக்க போட்டியாளராக மாறி இருக்கிறார் ஜிபி முத்து. முன்னதாக முதல் நாள் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் தனியே சென்றதாக சொல்லி புலம்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மேலும் பயமுறித்திய நடிகர் கமல்ஹாசன் ஜாலியாக ரசித்தார். பின்ன ஜிபி முத்து மழையில் ஆடினார். பிக்பாஸ் வீட்டுக்குள்ளும் போட்டியாளர்கள் குழுவாக பிரிந்தபோதும் கூட, மற்ற அணிகளுக்கு ஹெல்ப் பண்ணுவேன் என அடம் பிடித்து அனைவருடனும் பழகினார். இருப்பினும் தனலட்சுமி, தான் கோபமாக பேசியதை மரியாதைக்குறைவாக எடுத்துக்கொண்டதை குறிப்பிட்டு கடந்தவாரம் அழவும் செய்தார்.

இதனை தொடர்ந்து தற்போது வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை இந்த கமல்ஹாசன், ஜிபி முத்துவிடம் பாதாம் கொடுத்து அது என்ன என்று கேட்க, ஜிபி முத்து பாதாம் என்று சொல்ல, இது தெரிகிறது .. ஆதாம் தெரியவில்லையா? என கிண்டல் அடித்தார். அப்போதும், ஆதாம் எங்கே இருக்கிறார்? என்று வெள்ளந்தியாக ஜிபி முத்து கேட்டிருந்தார். அப்படிப்பட்ட மனிதர் ஜிபி முத்துவை தனக்கு பிடிக்கும் என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார். இந்த எபிசோடில் ஹீரோயின்கள் 2 பேர், தன்னுடன் நாயகிகளாக நடிக்க வேண்டும் என்றால், நயன்தாரா மற்றும் சிம்ரன் என்று ஜிபி முத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்தான் ஜிபி முத்து கடந்த 2 நாட்களாக மனசு சரியில்லை, வீட்டு நினைவாக இருக்கிறது, நான் வீட்டுக்கு போகிறேன், எல்லாரும் என்னை வெளியே போக நாமினேட் பண்ணுங்கள் என கூறிக்கொண்டிருந்தார். அவரிடம் பேசும் ஹவுஸ்மேட்கள் அசீம், ஏடிகே உள்ளிட்டோர், “ஆனந்த், மணி யாரும் வர மாட்டார்கள்.. நாங்களே நாமினேட் செய்தாலும் மக்கள் நினைத்தால் தான் நீங்கள் வெளியே போக முடியும். உங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர்கள் உங்களுக்கு ஓட்டு போட்டால் நீங்கள் உள்ளே தான் இருப்பீர்கள்” என்று சமாதானப்படுத்துகிறார்.

ஆனாலும் சமாதானமாகாத ஜிபி முத்துவிடம், பிக்பாஸ் கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து பேசுகிறார்.  அப்போது பேசும் பிக்பாஸ், “இத்தனை நாட்கள் நீங்கள் நன்றாக விளையாடி கொண்டிருக்கிறீர்கள். முதல் தலைவர் என்ற பதவியையும் 2 மணி நேரம் கஷ்டப்பட்டு ஜெயிச்சு வாங்கி இருக்கீங்க. இந்த முத்து தான் எனக்கு தெரிஞ்ச முத்து. வெளிய இருக்குறவங்க உங்கள பாத்து பல விஷயங்களை கத்துக்குறாங்க. இந்த நிகழ்ச்சில காலடி எடுத்து வெச்சு இன்னும் ஒரு படி மேலே போய் உலகம் பூரா இருக்குற தமிழ் மக்களுக்கு ஜிபி முத்துன்னா யாரு அப்டின்னு தெரியபடுத்தி இருக்கீங்க. இது ஒரு புது அனுபவமா யோசிச்சு அதுக்கப்பறம் செயல்படுங்க” என ஜிபி முத்துவுக்கு அறிவுரையும் வழங்கினார்.

ஆனாலும் ஜிபி முத்து, கதை சொல்லும் டாஸ்க்கில், தன் கதையை சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு முன்பாக ஹவுஸ்மேட்ஸ் சிலரிடம் தன்னை கதை சொல்லவிடாமல் தடுத்து தன்னை வெளியே அனுப்பி, அதன் வழியே தன்னை நாமினேட் பண்ணி வீட்டை விட்டு வெளியே அனுப்ப உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி ஹவுஸ்மேட்ஸூம் பஸ்ஸரை அழுத்த, கதை சொல்ல தொடங்கிய ஜிபி முத்து, “ஐயா. ராசா.. கோடி கும்புடு” என்று சொல்லிக்கொண்டே கையைடுத்து கும்பிட்டுக் கொண்டே வெளியே ஓடிவருகிறார்.,

Also Read | "நீங்க பண்ணது தப்புங்க".. கோவப்பட்ட விக்ரமன்.. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த காரசார விவாதம்..!

BIGG BOSS 6, BIGG BOSS TAMIL, BIGG BOSS 6 TAMIL

மற்ற செய்திகள்